DHROGIGAL ஜாக்கிரதை

For English: www.pdfofindenglish.blogspot.com
                            DHROGIGAL ஜாக்கிர்தை
ஓர் பனிக்காலத்தின் வெயிற்பொழுது
நான் உன்னை சந்தித்தேன் அப்பொழுது
நான் ஏற்றேன் அப்பொழுதை நற்பொழுதென
நாம் இருவர் ஒன்றானோம்
பழகினோம் இருவர் ஒருவரானோம்
பூக்கள் பூத்துக்குலுங்கும் வேளை
வந்தாய் என் வீட்டு பூந்தோட்டத்திற்கு
நீ வந்ததால் நான் வியந்தேன்
பசுமையான தோட்டத்தில்
பைந்தமிழென பச்சை உடையில்
பளிச்சென வந்தாய்
பல விந்தை மனிதரைப்போல் வீழ்வேனோ என நினைக்க
நீ என்னை வீழ்த்தினாய் உன் பூவிழியால் 
ஒற்றை அலையினை கற்றையாக்கினோம்
புலனத்துள்(whatsapp) புகுந்தோம்-இளங்கலை
பெறும்முன்னே- இயங்கலை(online)அடைந்தோம்
என்னுள் ஏதோ மாற்றம் உணர்ந்தேன்
எனக்கு புரியவில்லை அது ஏமாற்றமென
பின்னர் ஓர் புத்தாண்டு கொண்டாடிய பின்
நான் உணர்ந்தேன் அந்த மாற்றம் ஏமாற்றமென
நான் துரோகிக்கப்பட்டேன் என உணர்ந்தேன்
வியந்தேன் திகைத்தேன் வீழ்ந்தேன்
 மீள முயன்றேன் எழுந்தேன் கவிஞனாய்
                           -AJAY(FAW)


Comments

Post a Comment

Popular posts from this blog