குரு வந்தனம்

குரு வந்தனம்
அன்று நான் சிறியோன்
கண்டேன் ஆசிரியனை
அச்சிறியோன்  சிறந்தோன் ஆனேன்
என்றும் பெரியோன் ஆசிரியன்
ஆசான் என் ஈசன்
கற்றவருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு
கற்பித்தவனுக்கு எங்கும் சிறப்பு
கல்வி என்பது கண்
கண் தானம் சிறந்த தானம்
கல்வி (கண் )ஐ  தானம் செய்யும்
குரு நமக்கு வாழ்வாதாரம்
கல்வி ரோஜாவை முள்ளின்றி  தந்த
ராஜா என் ஆசான் அவனே என் ஈசன்

                                                                             -AJAY(FAW)

Comments

Post a Comment